மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் வகையில், ரூபாய் 4.5 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் செலுத்தும் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கருவிகள் சேவா பாரதி மற்றும் கலங்கரை சேவா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டன.
அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் கருவிகள் வழங்கிய அறக்கட்டளை! - oxygen cylinder machine
மயிலாடுதுறை: சேவாபாரதி மற்றும் கலங்கரை சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கிய இரண்டு ஆக்ஸிஜன் செலுத்தும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

ஆக்ஸிஜன் செலுத்தும் கருவி
சேவா பாரதி மாநில சுற்றுச்சூழல் பொறுப்பாளர் மதிவாணன், சேவாபாரதி அமைப்பு நிர்வாகிகள் பாலமுரளி, பிரகாஷ், பாஜக நிர்வாகி நாஞ்சில் பாலு ஆகியோர் இக்கருவிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா, ’பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு