நாகப்பட்டினம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகள், கரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளைகளும் உணவு வழங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் உணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவு குறித்து ஆட்சியர் ஆய்வு! - district collector inspection
நாகப்பட்டினம்: மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், இங்கு வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக உள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார் எழுந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், வழங்கப்படும் நேரம் ஆகியவை குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உணவுகள் தரமாகவும், சரியான நேரத்திலும் வழங்க வேண்டும் என சம்பந்தபட்ட அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:உணவு சரியில்லாததை கண்டித்து கரோனா நோயாளிகள் சாலை மறியல்!