தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு - இருப்பை கொண்டு உரம் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தகவல் - மயிலாடுதுறை ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவும் நிலையில் தற்போது உள்ள இருப்பை கொண்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

Etv Bharat உரக்கடையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
Etv Bharat உரக்கடையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

By

Published : Aug 27, 2022, 9:47 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நேற்று (ஆக. 26) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, மயிலாடுதுறையில் உள்ள தனியார் உரம், விதை, பூச்சி மருந்து கடைகளில் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா இன்று (ஆக.27) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உரக்கடையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

உரம் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பின்னர் செய்தியாளரிடம் பேட்டி அளிக்கும்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் உரக்கிடங்கு மற்றும் தனியார் நிறுவனங்கள் பூச்சிமருந்து விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்ய மாவட்டத்தில் 5 வட்டாரங்களிலும் 5 தனிப்படை அமைக்கப்பட்டு கடைகள் மற்றும் குடோன்களில் இருப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றது.

உரங்கள் விற்பனை செய்யும்போது அதை கட்டாயமாக கடை உரிமையாளர்கள் பதிவு செய்கின்றனரா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக மத்திய அரசிற்கு உரங்கள் விற்பனை மற்றும் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது தெரியவரும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 118 தனியார் உரக்கடைகளும், 64 உரக்கிடங்குகளும் உள்ளன. எல்லா இடங்களிலும் ஒரு வார காலத்திற்குள் ஆய்வு செய்து இருப்புகள் கண்டறியப்படும்.

மேலும் உரங்கள் விலை குறித்து கடைகளில் முகப்பில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். வேளாண்மை துறை அலுவலங்களில் உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை உரத்தட்டுப்பாடு என்பது உள்ளது. தற்போதைய இருப்பை வைத்து விவசாயிகளுக்கு உரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவைப்பருத்தில் 118 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் இதுவரை 47 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் சீர்காழி தாலுகா எடமணலில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, வேளாண்துறை இணை இயக்குநர் சேகர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:ரூ.194. கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவ கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைப்பு

ABOUT THE AUTHOR

...view details