மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் மூச்சுதிணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 175 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், 10 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள், மேலும் 2 நாட்களுக்கு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது.
இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்குவதற்காக, 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.