தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவாரணத்தொகை திட்டத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் - வங்கிகளுக்கு எச்சரிக்கை!

குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையின் இரண்டாம் தவணை ரூ.2000, 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

நிவாரணத்தொகை  மாவட்ட ஆட்சியர்  மயிலாடுதுறை செய்திகள்  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா  மாவட்ட ஆட்சியர் லலிதா  அட்டைதாரர்  குடும்ப அட்டைதாரர்  இரண்டாம் தவணை  mayiladuthurai news  mayiladuthurai latest news  relief fund  collector inaugurate corona relief fund  corona relief fund  ration shop
நிவாரணத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்-வங்கிகளுக்கு எச்சரிக்கை!

By

Published : Jun 16, 2021, 1:16 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி, அதனைத் தீவிரமாகச் செயல்படுத்திவருகின்றனர்.

இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 4000 நிவாரண நிதி இரு தவணைகளாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

முதல் கட்டமாக ரூ. 2000 கடந்த மாதம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் (ஜூன் 3) அன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இதில் 14 வகை மளிகைப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட்டது.

அந்த வகையில் நேற்று (ஜூன் 15) கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள நியாய விலை கடையில், கரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000, 14 வகையான மளிகை பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை அம்மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கிவைத்தார். இதில் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்களான ராஜ்குமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து அம்மாவட்டத்திலுள்ள 425 நியாய விலை கடைகளில் சுமார் 2 லட்சத்து 72 ஆயிரத்து 18 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருள்கள் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் லலிதா பேசுகையில், “மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாங்கிய கடன்களைத் திரும்ப செலுத்தக்கோரி கட்டாயப்படுத்துவதாகவோ, தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரணத்தொகையை கொடுக்குமாறு வங்கிகள் கட்டாயப் படுத்துவதாகவோ புகார் எழுந்தால், அவர்கள்மீது கட்டாயப்படுத்தி கடன் வசூல் செய்யும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் கட்டணமில்லா சேவை எண் 18001021080-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க கோரிக்கை - முதலமைச்சரை சந்தித்த அற்புதம்மாள்

ABOUT THE AUTHOR

...view details