தமிழ்நாடு

tamil nadu

'தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி' பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

By

Published : Apr 24, 2021, 5:17 PM IST

மயிலாடுதுறை: தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

silampattam
silampattam

புதுடெல்லி தல்கதோரா ஸ்டேடியத்தில் தேசிய அளவிலான சீக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் முக்கியப் போட்டியாக சிலம்பம் இருந்தது. இப்போட்டியானது 5 வயது முதல் 7 வயது, 8 வயது முதல் 12 வயது, 13 வயது முதல் 15 வயது என மூன்று பிரிவாக நடைபெற்றது.

இதில், தமிழ்நாட்டிலிருந்து சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்டக்கழகம், காரைக்காலிருந்து குமார் மார்ஷியல் ஆர்ட்ஸ் கழகம் என, மொத்தம் 54 பேர் கலந்து கொண்டனர். இதில் சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 9 தங்கப் பதக்கம், 8 வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

இதில் 6 வயது சிறுவன் அபித்ஹரி சிலம்பத்தில் தங்கப் பதக்கமும், சுருள்வாள் சுழற்றலில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர்.

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற விளையாட்டு வீரர்கள்!

இதனையடுத்து வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரர்கள், சிலம்பாட்ட பயிற்சியாளர்கள் ஆகியோர் மயிலாடுதுறை ஆட்சியர் லலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details