தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நவ.24 முதல் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 - மயிலாடுதுறை ஆட்சியர்

கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நவ.24 முதல் ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். அந்தந்த நியாய விலைக் கடைகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு

By

Published : Nov 23, 2022, 9:34 AM IST

Updated : Nov 23, 2022, 11:27 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14-ஆம் தேதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அன்றைய தினமே உடனடியாக சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை குடும்பத்திற்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள 145 நியாய விலைக் கடைகளில் 99,518 குடும்ப அட்டைதாரர்களும், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 94 நியாய விலைக் கடைகளில் 62,129 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் சீர்காழி,தரங்கம்பாடி ஆகிய இரண்டு வட்டத்தில், 239 நியாய விலைக் கடைகளில் ரூ.1000 நிவாரண உதவித்தொகை 1,61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகின்ற 24.11.2022 அன்று முதல் வழங்கப்படும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

எனவே குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இதே பனிமூட்ட நிலையே தொடரும்!

Last Updated : Nov 23, 2022, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details