தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி வனச்சரக கடலோர பகுதிகளில் 3,265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

சீர்காழி வனச்சரகத்திற்கு உட்பட்ட கடலோர பகுதிகளில் இதுவரை 3265 அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

சீர்காழி வனச்சரகத்தில் 3265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு
சீர்காழி வனச்சரகத்தில் 3265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

By

Published : Jan 7, 2023, 1:22 PM IST

சீர்காழி வனச்சரகத்தில் 3265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பழையாறு,தொடுவாய், திருமுல்லைவாசல், கூழையாறு,வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வருவது வழக்கம்.

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோர பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற் பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்புக்காடுகளில் முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்கு சென்று விடும். இவற்றை அப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பாதுகாத்து வைப்பதற்காக வனத்துறையின் சார்பாக கூழையாறு,தொடுவாய், வானகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆமை குஞ்சுகள் பொறிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொறிப்பகங்களில் முட்டைகள் பாதுகாக்கப்பட்டு 45 நாட்கள் முதல் 50 நாட்களுக்குப் வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்படும். இந்த ஆண்டில் தற்போது வரை 3,265 ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆமைக்குஞ்சு குறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக சீர்காழி வனச்சரகர் டேனியல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குண்டுமணி மாலைகளை தங்கம் எனக் கூறி ரூ.6 லட்சம் மோசடி!

ABOUT THE AUTHOR

...view details