நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நேற்றிரவு (பிப்.16) எரிந்த நிலையில் இரண்டு பாராசூட்டுகள் பறந்து வந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாராசூட்டுகளில் ஒன்று, இளையராஜா என்பவரது வீட்டின் அருகேயுள்ள தென்னை மரத்தில் விழுந்து தீ பிடித்தது. உடனே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைத்தனர். மற்றொன்று அங்குள்ள வயல்வெளி வழியாக பறந்து சென்றது.