இந்திய நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் ஏதேனும் சதித் திட்டம் தீட்டி இருக்கலாம் என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இலங்கை, மாலத்தீவு, கேரளா உள்ளிட்ட கடல் பகுதிகளின் வழியாக பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி, சுதந்திர தின விழாவை சீர்குலைக்கலாம் என்பதால் கடலோரக் காவல் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.