மயிலாடுதுறைமக்களின் நீண்ட நாள் போராட்டம், கால் நூற்றாண்டு கனவாக இருந்த தனி மாவட்டம் கோரிக்கையை 2020ஆம் ஆண்டு, நாகை மாவட்டத்தைப் பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று மார்ச் மாதம் 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. மாவட்ட எல்லை வரையறை பணிக்காகச் சிறப்பு அலுவலராக லலிதா ஐஏஎஸ் அதே ஆண்டு ஜூலை 15ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகம் அதன் பின்னர், 2020 டிசம்பர் 28ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாகத் தொடங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியராக லலிதா நியமனம் செய்யப்பட்டார். தற்போது மாயூரநாதர் கீழ வீதியில் இருந்த வணிகவரித் துறை அலுவலகம் தற்காலிக ஆட்சியர் அலுவலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டுவருகிறது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகம் இந்நிலையில், மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டிருந்தது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகக் கட்டடத்திற்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் இதனையடுத்து, இன்று ஏழு மாடி கொண்ட பிரமாண்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனைக் காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கான பணிகளைத் தொடங்கிவைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் இந்நிலையில் தலைமைச் செயலக நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு பங்கேற்பு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதி எம்எல்ஏக்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் நான்கு வட்டங்கள், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள், ஐந்து ஒன்றியங்கள், இரண்டு நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
இதையும் படிங்க:வேதனையில் டெல்டா விவசாயிகள்: துயர் துடைக்குமா தமிழ்நாடு அரசு?