மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இந்த ஆதீனத்தின் குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் குருமுதல்வருக்கு குருபூஜை விழா நடைபெறும். இந்தாண்டு வரும் 22-ஆம் தேதி தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெறம்.
இந்த நிலையில் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.
திமுக ஆன்மீக அரசு என்று நான் சொன்னதை முதலமைச்சர் ஸ்டாலின் மெய்ப்பித்துள்ளார் - தருமபுரம் ஆதீனம் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கடந்த மாதம் 27 ஆம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, தடையை நீக்கி வலியுறுத்தி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் வலியுறுத்தினார்.
மேலும் பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் சார்பில் பல்வேறு ஆதின கர்த்தர்கள் நேற்று முன்தினம் (மே 7) முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து ஓராண்டு நிறைவு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பட்டணப் பிரவேச தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் புகழாரம் இதனையடுத்து, பட்டிணப்பிரவேசம் தடையில்லாமல் நடைபெறும் என்றும், யாரும் சர்ச்சை கருத்துக்கள் பதிவிட வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாய்மொழியாக தெரிவித்ததாக தருமபுரம் ஆதீனகர்த்தர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடையை நீக்கி வரும் 22 ஆம் தேதி பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சியில் மனிதர்கள் பல்லக்கை தூக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி ஆணையிட்டார்.
இது தொடர்பாகக் குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலய மடத்தில் தங்கியுள்ள தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கான தடையை நீக்க ஆதரவு தெரிவித்த அனைத்து பக்தர்களுக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் நல்லாசிகள் என்றும், ஏற்கனவே திமுக அரசு ஆன்மீக அரசு என்று நான் சொன்னதை தற்போது முதலமைச்சர் மெய்ப்பித்துள்ளார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆன்மீக அரசு: தருமபுரம் ஆதீனம்