மயிலாடுதுறை: சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்கள், பயிர்களை ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
வடகிழக்குப் பருவ மழையால் மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டிருந்த பயிர்களின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த அனைத்துப் பாதிப்புகளையும் பார்வையிட்ட ஸ்டாலின், அங்குக் காத்திருந்த பொதுமக்கள், உழவரிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். பயிர்கள் பாதிப்பு குறித்து உழவரிடம் கேட்டறிந்த ஸ்டாலின், முழுமையாக ஆய்வுசெய்து நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
முதலமைச்சரின் ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் லலிதா, அமைச்சர்கள் கே.என். நேரு, மெய்யநாதன், பெரியகருப்பன், பெரியசாமி உள்ளிட்டோர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், வேளாண்மை துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:TN RAIN: கடலூர் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்