தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜெயலலிதா அம்மையாருக்கு துரோகம் இழைத்த இபிஎஸ், ஓபிஎஸ்’ - திருமாவளவன் எம்.பி - vck election campaign

நாகப்பட்டினம்: முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பாஜகவுடன் கூட்டணி வைத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைத்துவிட்டதாக எம்பியும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் எம்.பி
திருமாவளவன் எம்.பி

By

Published : Mar 30, 2021, 7:50 AM IST

நாகப்பட்டினம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி சார்பில் விசிக வேட்பாளர் ஆளுர் ஷாநவாஸ், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அப்பகுதியில் எம்பியும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் நேற்று (மார்ச்.29) பரப்புரை மேற்கொண்டார். தொடர்ந்து அவுரி திடலில் நடைபெற்ற கூட்டத்தில் கரு.பழனியப்பன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அந்தப் பரப்புரை கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியதாவது: ”தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். எதிரணியில் இருப்பவர்கள் வழக்கமான அதிமுகவினர் இல்லை. அவர்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடியை எதிர்த்து வந்தார். தற்போது ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் எடப்பாடியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பாஜகவை ஆதரிப்பது என்பது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் செய்யும் துரோகம் இல்லையா?. அதிமுக பாஜகவிற்குள் கரைந்தேவிட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியின் பினாமி கட்சியாக மாறி விட்டது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு தாமரை சின்னம் மட்டுமல்ல, இரட்டை இலை சின்னம், மாம்பழம் சின்னம் உள்ளிட்ட மூன்று சின்னங்கள் உள்ளன. இந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கும் மாம்பழத்திற்கும் ஓட்டளித்தால் அது பாஜகவிற்கு ஓட்டு அளித்ததாக அர்த்தம்” எனப் பேசினார்.

திருமாவளவன் எம்.பி பரப்புரை

முன்னதாக திருமருகல், கீழ்வேளூர் தொகுதிகளில் நாகை மாலியை ஆதரித்தும் திருமாவளவன் பரப்புரை செய்தார்.

இதையும் படிங்க:மோடியின் பக்கபலமாக செயல்படும் இபிஎஸ் ஓபிஎஸ்' - சீதாராம் யெச்சூரி

ABOUT THE AUTHOR

...view details