மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி பகுதிகளைச் சேர்ந்த கிராம மீனவர்கள்,தடையை மீறி சுருக்குமடி வலையுடன் இன்று மீன்பிடிக்கச் சென்றனர்.
இதையறிந்த மற்ற கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் அவர்களை வழிமறிக்க முயன்றனர். இதனால் கடலோர கிராமங்களில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
சுருக்குமடி வலையுடன் சென்ற படகுகள் கரை திரும்பும் போது, வாணகிரி கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகின் மீது பூம்புகார் விசை படகு மோதியது. இதில் படகு உடைந்து மூழ்கிய நிலையில், அதிலிருந்த சிலம்பரசன்,வினோத் ஆகிய இருவர் காயமடைந்தனர்.