சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், நேற்று நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
கோட்டைவாசலில் தொடங்கிய கண்டன ஊர்வலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், இஸ்லாமியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலமானது, நாகை புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.