நாகையில் மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
அதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்த வலியுறுத்தியும், தினக்கூலி 350 ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.