தமிழ்நாடு முழுவதும் சிஐடியு, ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று( மே 22) போராட்டம் நடந்து வருகிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சிஐடியு மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கரோனா தடுப்பு பணியாற்றும் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு, உபகரணங்களை தாமதமின்றி வழங்கக் கோரியும், பெட்ரோல் விலையை உயர்த்துவதை கைவிடக் கோரியும், அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் பல கோரிக்கைகளுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட போராட்டம் தென்காசியில் இன்று போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து தென்காசி பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர்களுக்கு வேலை தொழிலாளர்கள் நல சட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தும் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தப்பட்டது.
தென்காசி மாவட்ட போராட்டம் திருப்பூரில் சிஐடியு , ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக 8 மணி நேர வேலை திட்டத்தை 12 மணி நேரம் ஆக்கக்கூடாது. மாவட்ட நலவாரிய கண்காணிப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும், சம்பள குறைப்பு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 150 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: 'இனிமேல் யாரும் கருமுட்டை தானம் செய்யாதீங்க' - அனுபவத்தைப் பகிரும் பெண்!