மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகையை அடுத்த திட்டச்சேரி பேருந்துநிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கோரியும், அதற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.