மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாகை அவுரி திடலில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு சார்பாக சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.