தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திஆர்ப்பாட்டம் - citizenship amendment act

நாகப்பட்டினம்: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாகை வட்டார அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்துல் உலமா சபை அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

citizenship amendment act
citizenship amendment act

By

Published : Dec 21, 2019, 6:28 PM IST

Updated : Dec 21, 2019, 9:40 PM IST

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்து திரும்பப் பெற வலியுறுத்தி நாகை வட்டார அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்துல் உலமா சபை அமைப்புகள் சார்பில் நாகை அவுரித் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தங்களது கடைகளை அடைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக நாகூரில் பெரும்பான்மையான கடைகளையும் நாகப்பட்டினத்தில் சில கடைகளையும் அடைத்து வணிகர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்'

Last Updated : Dec 21, 2019, 9:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details