தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாள்களாக குறைய தொடங்கியுள்ளது.
இதன்காரணமாக கரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், பொது முடக்கத்தில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்கள் உள்ளி்ட்ட 11 மாவட்டங்களில் தொற்று குறையாத காரணத்தால் தளர்வில்லாத பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக்கடைகள் அண்மையில் திறக்கப்பட்டன. இதன்காரணமாக அண்டை மாவட்டங்களிலிருந்து மது வாங்க பல குடிமகன்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்திற்குள்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார் பகுதியை ஒட்டியுள்ள தரங்கம்பாடி வழியாக இருசக்கர வாகனங்களில் வரும் குடிமகன்கள், மாவட்ட எல்லையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆற்றின் வழியாக நடந்து சென்று மதுவாங்கி வருகின்றனர்.