நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் பழைமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா நேற்று (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் ஆலயத்தின் வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி, முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.
புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா கொடியேற்றம்! - கொடியேற்றம்
நாகை: கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
church festival
தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, ஆலயத்தின் முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வரும் ஜுன் 1ஆம் தேதி நடைபெறுகின்றது.