டிச. 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையிலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலுள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கிறிஸ்மஸ் விழா கொண்டாடினர்.
விழாவில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இதைத்தொடர்ந்து இயேசு பிறப்பு நிகழ்வுகள், இயேசு பிறப்பின் முக்கியத்துவம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டன.
வேளாங்கண்ணி கிறிஸ்துமஸ் விழா இந்நிகழ்வில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், வேளாங்கண்ணி பேராலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகை: தோட்டக்கலைத் துறையின் அசத்தும் ஐடியா!