நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜமாத்தினர், திமுகவினர் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாழந்தொண்டியில் தொடங்கிய பேரணி திருமுல்லைவாசல் கடைத்தெரு வரை சுமார் மூன்று கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.
மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில், கையில் தேசியக்கொடியை ஏந்தியும் சிறுவர்கள் முகத்தில் தேசிய வண்ணங்களை வரைந்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிச்சென்றனர். தொடர்ந்து பேரணியாகச் சென்றவர்கள் திருமுல்லைவாசல் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.