வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நிவர் புயல் இன்று (நவ.24) மாலை தீவிர புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை (நவம்பர் 25) மாலை தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.