தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கப் போவது முதலமைச்சர் ஸ்டாலின் தான்"-அன்பில் மகேஷ் - அன்பில் மகேஷ்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்க போவது முதலமைச்சர் ஸ்டாலின் தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

By

Published : Jun 23, 2022, 9:42 AM IST

மயிலாடுதுறை: முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பூம்புகார் தொகுதி எம்எல்ஏவும் மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, பெண் விடுதலை இப்படிபட்ட திராவிட மாடல் ஆட்சியை தான் தமிழகத்தில் நம் முதல்வர் பறைசாற்றி வருகிறார்" என்றார்.

”நாளைய தமிழகத்தை ஆள்வார் உதயநிதி”மேலும் “இளைய சமுதாயத்தை பட்டை தீட்ட வேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், நாளை தமிழகத்தை ஆள போகின்ற உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் பாசறைக் கூட்டத்தை நடத்துகிறார். சட்டமன்றத்தில் அமைச்சர்கள் முதலமைச்சரை பாராட்டி பேசினால் முதலமைச்சர் வெளியில் சென்று விடுவார். இல்லை என்றால் பேசும் அமைச்சரை திட்டத்தின் கருத்தை மட்டும் கூற சொல்வார் என தெரிவித்தார்.

இதையடுத்து “மக்கள் ஓட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பிவைத்தது முதல்வரை பாராட்டுவதற்கு அல்ல. மக்களின் பிரச்சனையை பேச மட்டும் தான் என்று கூறுவதால் தற்போது நாங்கள் முதலமைச்சரை பாராட்டுவது கிடையாது. ஆனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே தற்போது நமது முதல்வரை பாராட்டி வருகின்றனர். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்க போவது நமது முதல்வர் தான் என்று கூறினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்: முழுப்பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details