நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் ஆட்சியர் பிரவீன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நாளை (ஆகஸ்ட் 28) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பதற்காக திரூவாரூர் செல்லும் முதலமைச்சர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.