தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவற்றவரின் உடலை அடக்கம் செய்த பெண் தலைமை காவலர்! - மனிதநேயமாக செயல்படும் தலைமைக் காவலர்

நாகப்பட்டினம்: ஆதரவற்றவரின் உடலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்த பெண் தலைமைக் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

ஆதரவற்றவர் உடலை அடக்கம் செய்யும் தலைமை காவலர்
ஆதரவற்றவர் உடலை அடக்கம் செய்யும் தலைமை காவலர்

By

Published : Oct 4, 2020, 2:46 PM IST

நாகப்பட்டினம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பாப்பாகோயில் அருகே சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்து கிடப்பதாகக் தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகப்பட்டினம் நகர காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைபற்றினர்.

இது குறித்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடையாளம் தெரியாத அந்நபரின் உடலானது நாகப்பட்டினம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக 5 நாட்கள் வைக்கப்பட்டது. ஆனாலும், எவ்வித முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து உடற்கூராய்வு செய்யப்பட்ட அவரது உடலுக்கு, நாகப்பட்டினம் நகர காவல் நிலைய பெண் தலைமை காவலர் ராஜாத்தி இறுதி சடங்கை மனிதநேயத்துடன் செய்து முடித்தார். அவருடைய இந்த மனித நேயமிக்க செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details