தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 மணி நேரத்தில் நாகை - இலங்கை! சீறிப்பாய்ந்த செரியாபாணி கப்பல்…! பயணிகள் உற்சாகம்!

நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுகம் இடையே 40 ஆண்டுகளுக்கு பிறகு செரியாபாணி என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.

4 மணி நேரத்தில் நாகையிலிருந்து இலங்கைக்கு சீறிப்பாய்ந்த செரியாபாணி கப்பல்
4 மணி நேரத்தில் நாகையிலிருந்து இலங்கைக்கு சீறிப்பாய்ந்த செரியாபாணி கப்பல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 5:46 PM IST

4 மணி நேரத்தில் நாகையிலிருந்து இலங்கைக்கு சீறிப்பாய்ந்த செரியாபாணி கப்பல்

இலங்கை: நாகப்பட்டினம், இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான "செரியாபாணி" என பெயரிடப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் துவங்கி உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடக்கி வைத்தார். கப்பலில் பயணம் மேற்கொள்ள பயண கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ 6500 + 18 % ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து ரூ.7670 நிர்ணயிக்கப்பட்டுளளது. இந்நிலையில் துவக்க விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் செரியாபாணி கப்பலில் இலங்கை செல்வதற்கு 75% சலுகை விலையில் ரூ.3000 என கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

150 பயணிகள் பயணம் செய்யக்கூடிய இந்த செரியாபாணி கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம் நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய கப்பல், இலங்கை காங்கேசன் துறைமுகத்தை மதியம் 12.20 மணிக்கு சென்றடைந்தது.

இலங்கை சென்றடைந்த செரியாபாணி பயணிகள கப்பலினை கப்பல் துறை விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறீ பாடலி சில்வா, கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கப்பல் சேவையானது தொடர வேண்டும் எனவும் இலங்கை நாட்டுப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 40 ஆண்டுகளுக்குப் பின் நாகை - இலங்கை கப்பல் சேவை தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details