தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரில் தத்தளிக்கும் சந்திரபாடி கிராமம் - Chandrapadi people suffering from floods

மயிலாடுதுறை: கடல் நீர், ஆற்று நீர், மழை நீர் என சந்திரபாடி மீனவ கிராமம் தண்ணீரில் தத்தளிக்கிறது.

 தண்ணீரில் தத்தளிக்கும் சந்திரபாடி கிராமம்...
தண்ணீரில் தத்தளிக்கும் சந்திரபாடி கிராமம்...

By

Published : Dec 4, 2020, 4:33 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள சந்திரபாடி மீனவ கிராமத்தில் 900 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி தொழிலையே நம்பியுள்ளனர். தாழ்வான பகுதியான சந்திரபாடி மீனவ கிராமத்தில் புயல் ஏற்படும் காலங்களில் கடல் அரிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது புரெவி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து, கடல்நீர் கிராமத்துக்குள் புகுந்தது. மேலும், முட்டுக்கரை ஆறு பெருக்கெடுத்து ஆற்றுநீரும் கிராமத்திற்குள் புகுந்துள்ளது. தொடர்மழையால் மழைநீரும் சூழ்ந்து கிராமமே தண்ணீரில் தத்தளிக்கிறது.

புயல், வெள்ள காலங்களில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க கிராமத்தில் கருங்கல் தடுப்பு அமைக்குமாறும் முட்டுக்கரை ஆறு கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரி 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை நிறுத்திவைக்க வசதி ஏற்படுத்தித் தருமாறும் தமிழ்நாடு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details