மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி, புயல், வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் மத்திய வேளாண்மைத்துறை இயக்குநர் டாக்டர் மனோகரன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைப் பார்வையிட்ட மத்தியக்குழு! அது மட்டுமின்றி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது விவசாயிகள் மழைநீர் வடிந்துள்ள நிலையில் சம்பா பயிர்கள் வளர்ந்தாலும் பலன்தராது, நெல் வளரும் சமயத்தில் பதராகத்தான் (கருக்காய்) வரும் என்று மத்திய குழுவினரிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஆய்வின்போது தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு தொகுப்பில் இடம்பெறும் ஆவின் நெய்