தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கலப்பட மருத்துவமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்' - மத்திய அரசு

மயிலாடுதுறை: கலப்பட மருத்துவமுறையைப் புகுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய குழந்தைகள் மருத்துவக் குழுமம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

central-government-should-abandon-mixed-medicine-medical-council-of-india
central-government-should-abandon-mixed-medicine-medical-council-of-india

By

Published : Feb 8, 2021, 7:46 AM IST

இந்திய குழந்தைகள் மருத்துவக் குழுமம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை மருத்துவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

கலந்துரையாடலில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை, ரத்த ஓட்டத்தில் உள்ள குறைபாடுகள், குழந்தைகளுக்கான சிறுநீரகத் தொற்று, பச்சிளம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் குறைபாடுகள் போன்றவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், இதற்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்தும் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய குழந்தைகள் மருத்துவக்குழும முன்னாள் மாநிலத் தலைவர் மருத்துவர் விருதகிரி, "மத்திய அரசு சித்தா, அலோபதி கலப்பட மருத்துவமுறையை கொண்டுவரும் முயற்சியைக் கைவிட வேண்டும். சித்த மருத்துவத்தையும், அலோபதி மருத்துவத்தையும் சேர்ப்பது சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

‘கலப்பட மருத்துவமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்’

தற்போது அனைவரின் கவனமும் கரோனாவில் இருக்கிறது. குழந்தைகளுக்கு போலியோ, கக்குவான், அம்மை தடுப்பூசி போன்ற பல்வேறு தடுப்பூசிகள் போடுவது வழக்கம். அதில் அரசு, மருத்துவர்கள், பொதுமக்கள் முழுக் கவனம் செலுத்தினால் குழந்தைகள் நலனைப் பாதுகாக்க முடியும்" என்றார்.

இதையும் படிங்க: தண்ணீர் லாரியும் காரும் மோதி விபத்து!

ABOUT THE AUTHOR

...view details