தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி ஆடி பெருக்கு விழா கொண்டாட்டம் - ஆடி பெருக்கு விழா

மயிலாடுதுறை: காவிரி துலாக்கட்டத்தில் தடையை மீறி ஆடி பெருக்குவிழா கொண்டாட்டப்பட்டது.

ஆடி பெருக்கு
ஆடி பெருக்கு

By

Published : Aug 3, 2021, 10:01 AM IST

Updated : Aug 3, 2021, 10:34 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. அதேசமயம், திருவிழாக்கள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

மேலும், ஆடி பெருக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டம் கூடினால் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தடைஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆடி பெருக்கு விழா

இந்நிலையில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தடையை மீறி பொதுமக்கள் ஆடி பெருக்கு விழாவை கொண்டாடினர். அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடி வருகின்றனர்.

Last Updated : Aug 3, 2021, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details