மயிலாடுதுறை:கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி நீர், பல்லாயிரம் மைல்கள் கடந்து, பூம்புகாரில் சங்கமிக்கும். மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது.
மேட்டூரில் கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்பட்ட காவிரி நீர், இக்கதவணையை வந்தடைந்தது. பின்னர் தேக்கிவைத்து ஒவ்வொரு பாசன ஆறுகளுக்கும், கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து நீர் திறக்கப்படும்.
நீருக்குப் படையலிட்டும், மலர் தூவியும் வணங்கி வரவேற்பு அந்த வகையில் மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று (ஜூன் 21) காலை மேலையூர் கடைசி கதவணைக்கு வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த பொதுப்பணித் துறையினர், நீருக்குப் படையலிட்டும், மலர்த்தூவியும் வணங்கி வரவேற்றனர்.
வழக்கமாக நீரைத் தேக்கிவைத்து ஒவ்வொரு பாசன ஆறுக்கும், கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த முறை, முறைவைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:"வெளியானது பீஸ்ட் செகன்ட் லுக்" விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு