தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை மீறி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஏலம்! - Nagapattinam news

நாகை: சீர்காழி அருகே ஊரடங்கை மீறி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற முந்திரி மர ஏலத்தால் கரோனா தொற்று பரவும் வாய்ப்புள்ளதாக அக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஊரடங்கு மீறி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஏலம்
ஊரடங்கு மீறி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஏலம்

By

Published : May 1, 2020, 12:38 AM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. சுமார் 64 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சேமிப்புக் கிடங்கை சுற்றி 10 ஏக்கருக்கும் மேல் முந்திரி மரங்கள் உள்ளன.

இந்த முந்திரி மரங்கள் அனைத்தும் ஏலம் விடப்படுவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏலம் எடுப்பதற்கு 200க்கும் மேற்பட்டோர், கிடங்கின் முன்பு குவிந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்ற நாகை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், அலுவலர்கள் வந்தனர். வாசலில் கூடியிருந்த பொதுமக்களை பார்த்து அவர்கள் காரிலிருந்து இறங்கி ஏலம் சம்பந்தமாக பேசினார்.

ஊரடங்கு மீறி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஏலம்

அப்போது பொதுமக்களுக்கும், அலுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சற்று பதற்றம் ஏற்பட்டது. மேலும் அலுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாக ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். தனிமனித சமூக இடைவெளியை பின்பற்றாமல் அருகருகே நின்று கூட்டமாக பேசியதால், ஏலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது, முதுநிலை மண்டல மேலாளர், அலுவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details