தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு! - ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை: முழு ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர்.

ஊரடங்கு விதிகளை மீறிய நபர்கள் மீது வழக்குப்பதிவு
ஊரடங்கு விதிகளை மீறிய நபர்கள் மீது வழக்குப்பதிவு

By

Published : May 17, 2021, 7:12 AM IST

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று (மே16) மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்த போதிலும் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்தனர். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் முக்கிய சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு, தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வந்தனர். காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

இதுவரை ஊரடங்கு உத்தரவு விதியை மீறிய 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 24 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வந்த 250 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைக்கவசம் அணியாமல் வந்த 350 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அபராதம் விதிப்பது, நடவடிக்கை எடுப்பது காவல் துறையின் நோக்கமல்ல என்றும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைபிடித்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நிறைவேற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர். பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோளும் விடுத்தனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு மீறல்: தூத்துக்குடியில் 86 லட்சம் அபராதம் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details