நாகையில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க மீனவர்களுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட பகுதிகளில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து விற்பனை செய்வதாக மீன்வளத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட மீன்வளத் துறை அலுவலர்கள் பூம்புகார், நாகை, நம்பியார் உள்ளிட்ட பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 11 டன் மத்தி மீன்களைப் பறிமுதல் செய்தனர்.
சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 11 டன் மத்தி மீன்களை மீன்வளத் துறை அலுவலர்களால் பறிமுதல் பின்னர் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் எனவும் மீறி மீன்பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத் துறை அலுவலர்கள் எச்சரிக்கைவிடுத்தனர்.
நாகை துறைமுகத்தில் மீன்வளத் துறை அலுவலர்கள் தலைமையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு பொது ஏலத்தில் விடப்பட்டது.
இதையும் படிங்க: பச்சை நிறத்தில் மாறிய கடல் - விஞ்ஞானி விளக்கம்