தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கட்சி பிரமுகர் கைது! - தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கைது

தரங்கம்பாடி அருகே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பதுக்கி வைத்திருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 1/4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கைது
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கைது

By

Published : May 29, 2021, 2:14 PM IST

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் அருகே பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகணன்(36). இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது. தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், செம்பனார்கோவில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மயில்வாகனன் வீட்டை சோதனையிட்டனர்.

சோதனையில், வீட்டில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 11/4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சாராய ஊறல்கள் பறிமுதல்: காவல் துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details