நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ஆந்திராவிலிருந்து வேதாரண்யம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது சோதனையில் ஆந்திராவிலிருந்து வந்த கன்டெய்னர் லாரியில், 310 பண்டல்களில் 620 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து முதற்கட்ட விசாரணையில் இவை ஆந்திராவிலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல கொண்டுவரப்பட்டது என தெரியவந்தது.