மயிலாடுதுறை:நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை நகராட்சி 29ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட இடம் கிடைக்காததால் திமுகவைச் சேர்ந்த இளையராஜா என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். மீன் வியாபாரியான இளையராஜா வீடு வீடாக சென்று, தான் போட்டியிடும் சுயேச்சை சின்னமான கைப்பை சின்னத்திற்குத் தீவிரமாத வாக்குச் சேகரித்தார்.
சுயேச்சை வேட்பாளருடன் திமுகவினர்
இவரின், தந்தை கலியமூர்த்தி என்பவர் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று, நான்கு முறை கவுன்சிலராக பதவி வகித்ததால், வேட்பாளருடன் அப்பகுதியைச் சோந்த திமுகவினரும் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர். இந்நிலையில் சித்தர்காடு பகுதியில் உள்ள தனது மீன் விற்பனை நிலையத்திற்குச் சென்ற வேட்பாளர் அங்கு மீன் வாங்க வந்த பொதுமக்களுக்கு மீன்களை வெட்டி கொடுத்துத் தான் போட்டியிடும் கைப்பை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மயிலாடுதுறையில் மீன்களை வெட்டி கொடுத்து வாக்கு சேகரித்த வேட்பாளர்! இதையும் படிங்க:நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு