தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாய்க்கால் கரை உடைந்து வீட்டிற்குள் புகுந்த நீர்: உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை: வாய்க்கால் கரை உடைந்து வீடுகளுக்குள் நீர் புகுந்ததையடுத்து பொதுப்பணித் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

canal
canal

By

Published : Jul 31, 2021, 4:22 PM IST

மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் என்பவர் ஸ்ரீநாராயணபுரம் என்ற பெயரில் வாய்க்கால் செல்லும் பாதையில், குறுக்கே மண்சாலை அமைத்து நகரை உருவாக்கி விற்பனை செய்துள்ளார்.

அந்த இடத்தில் 350 பேர் வீடுகட்டி குடியிருந்துவருகின்றனர். இந்நிலையில் 45 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்த பழைய முத்தப்பன் காவிரி வாய்க்காலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் நிதித் திட்டத்தின்கீழ் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினர்.

வாய்க்காலில் சாலை அமைக்கப்பட்ட பகுதியில் பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் பொதுப்பணித் துறையினர் வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சாலையில் பாலம் கட்டாமலும், நீர் செல்ல வழி ஏற்படுத்தித் தராமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் காவிரி ஆற்றிலிருந்து முத்தப்பன் வாய்க்காலுக்கு நீர் திறந்துவிடப்பட்டது. ஸ்ரீநாராயணபுரத்தில் வாய்க்காலின் குறுக்கே உள்ள சாலையால் நீர் செல்ல வழியின்றி அபயாம்பாள்புரத்தில் வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டது.

இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி நீர் சூழ்ந்தது. வாய்க்காலில் அமைக்கப்பட்ட சாலையின் ஒருபுறத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

வாய்க்கால் கரை உடைந்து வீட்டிற்குள் புகுந்த நீர்

மற்றொருபுறம் வாய்க்கால் வறண்டு தரிசாகக் கிடக்கிறது. நீர் செல்ல வழியில்லை என்று தெரிந்தும் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

நகரில் அனைத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, இடத்தை விற்பனை செய்த பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் நீர் செல்ல தற்காலிகமாக குழாய் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொதுப்பணித் துறை பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை

ABOUT THE AUTHOR

...view details