தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாள் நிலுவையிலுள்ள மனுக்களுக்கு தீர்வு காண கூடுதல் காவல் துறை இயக்குனர் ராஜேஷ் தாஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி இன்று (அக்-7) நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுதாரர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மனுக்களின் குறைகளை கேட்டு நிலுவையில் உள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அலுவலர்கள் வாயிலாக பெருவாரியான மனுக்களுக்கு தீர்வுகளும், சமரசமும் செய்து தீர்வு கண்டார்.
மக்களின் குறை தீர்க்கும் வகையில் முகாம் - மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் தீர்வு முகாம்
நாகை: காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் தீர்வு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

sp grievance camp
மேலும், நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு அல்லது வெளி மாநிலத்திற்கு செல்பவர்கள் தங்களின் விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தெரியப்படுத்திவிட்டு செல்லுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:2021ஆம் ஆண்டுக்கான சுருக்கமுறைத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!