தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழியில் வர்த்தகத்தொடர்பு பணிமனை பயிற்சி முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு - nagapattinam district news

சீர்காழி அருகே வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக, விவசாயிகளுக்கான இரண்டு நாள் வர்த்தகத்தொடர்பு பணிமனை பயிற்சி முகாம் தொடங்கியது.

வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சி முகாம்
வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சி முகாம்

By

Published : Mar 3, 2022, 5:27 PM IST

மயிலாடுதுறை:சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக விவசாயிகள், தங்களது பொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக இரண்டு நாள்கள் வர்த்தகத்தொடர்பு பணிமனைப் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது.

விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை குறைந்த விலைக்கு விற்பதைத் தடுக்கவும், மதிப்புக்கூட்டுப் பொருளாக உற்பத்தி செய்து நிலையான லாபம் பெறும் நோக்கிலும் இப்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த முகாம் இன்று முடிவடைகிறது.

வேளாண்மை இணை இயக்குநர் சேகர், இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கவுரை ஆற்றினார். மதிப்புக்கூட்டுத்தொழில் தொடர்பாக மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ரவிச்சந்திரன் விவசாயிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

முகாமில் இயற்கை சாகுபடி காய்கறிகள், பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய மதிப்புக்கூட்டுப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், கருவாடு தயாரிப்பு, மீன் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்பு, பனை ஓலை பொருள்கள், சணல் பை தயாரிப்பு உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

வர்த்தகத் தொடர்பு பணிமனை பயிற்சி முகாம்

இந்த நிகழ்வில் வேளாண் துறை, வேளாண் வணிகத்துறை, கால்நடைத் துறை, மீன்வளத்துறை மற்றும் இயற்கை விவசாயிகள், உற்பத்தியாளர்கள், நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மனைவியை அரிவாளால் வெட்ட முயன்ற கணவர் - பதைபதைக்கும் வீடியோ காட்சி

ABOUT THE AUTHOR

...view details