மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மூவலூர் பகுதியைச்சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்மணி, தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் தந்தை நடராஜனுடன், தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப்பேருந்து முந்திச்செல்ல முயன்றதில், இருசக்கர வாகனத்தின் மீது உரசியது. இதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் புவனேஸ்வரியின் எட்டு மாத பெண் குழந்தை பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.