தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் கட்டட தொழிலாளி கொலை - ஒருவர் கைது! - ரெடிமேட் காம்பவுண்ட்

நாகை: மயிலாடுதுறையில் மதுஅருந்தியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் சக உறவினரையே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

builder-beaten-to-death-man-arrested
builder-beaten-to-death-man-arrested

By

Published : Feb 17, 2020, 4:01 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சாந்துகாப்பு தெருவை சேர்ந்தவர் சபரிராஜ் (38 ). அவரது அண்ணன் அசோக் நடத்திவரும் ரெடிமேட் காம்பவுண்ட் அமைத்துக்கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது உறவினரான கிட்டப்பா பாலம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(39).

இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் இருவரும், ஒன்றாக மது அருந்திவிட்டு ரெடிமேட் காம்பவுண்ட் செய்யும் இடத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சதீஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சபரிராஜ் தலையிலும், முகத்திலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சபரிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுபோதையில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்த அசோக், உடனடியாக மயிலாடுதுறை காவல் துறையினரிடம் புகாரித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சதீஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நாகையில் குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றிய சகோதரர் - காப்பாற்றிய உறவினரும் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details