மயிலாடுதுறை:குத்தாலம் அருகே லாரி தங்கமணியின் மகன் வைத்தியநாத சுவாமி (40) லாரி ஓட்டுநராக இருந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்துவருகிறார்.
இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சித்தப்பா மூர்த்தியின் மகன்களான திவாகர் (32), தினேஷ் (34) ஆகியோருடன் வைத்தியநாத சுவாமிக்கு இடப்பிரச்சினை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 27) மூவலூர் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த திவாகர், தினேஷ் ஆகியோரிடம் வைத்தியநாத சுவாமி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பாக மாறியுள்ளது.