நாகப்பட்டினம்: கீழ்வேளூர் அருகே உள்ள அகடம்பரனூர் மேலத் தெருவில் வசிப்பவர் காத்தமுத்து. இவரது மகன்கள் நவநீதகிருஷ்ணன் (55), வல்லதரசு (49). அண்ணன் - தம்பியான இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர். மேலும், ஒரே பகுதியில் எதிரெதிரே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வல்லதரசு, அண்ணன் வீட்டிற்குச் சென்று சொத்து பிரச்னையை எழுப்பி தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக, வல்லதரசு அரிவாளால் அண்ணன் நவநீத கிருஷ்ணனை வெட்டினார். அவரது உடலில் பல இடங்களில் சராமாரியாக வெட்டியதில் நவநீத கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.