தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜிம்னாஸ்டிக்கில் உலக சாதனை படைத்த அண்ணன் தங்கை

மயிலாடுதுறை அருகே ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஜிம்னாஸ்டிக் போட்டியில் அண்ணன், தங்கை உலக சாதனை படைத்துள்ளனர்.

மேலூரில் அண்ணன், தங்கை ஜிம்னாஸ்டிக்கில் உலக சாதனை!
மேலூரில் அண்ணன், தங்கை ஜிம்னாஸ்டிக்கில் உலக சாதனை!

By

Published : Oct 15, 2022, 10:42 PM IST

மயிலாடுதுறைஅடுத்த மேலூரில் அழகு ஜோதி அகாடமி என்ற தனியார் பள்ளியில் இன்று(அக்.15) முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 91வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அஸ்வின் என்ற 12 வயது சிறுவன் சிலம்பம் சுற்றியபடியே 1 கிலோ மீட்டர் தூரம் கடந்து சாதனை புரிந்தார்.

அவரது தங்கையான அஸ்விதா 8 வயது சிறுமி வளையம் சுற்றியும், சிலம்பம் ஆடியும், ஜிம்னாஸ்டிக் செய்தும் 500 மீட்டர் தூரத்தை ஏழு நிமிடங்களில் கடந்தனர். ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினர் இதனை புதிய சாதனையாக அங்கீகாரம் செய்தனர்.

இதுபோல் சிறுமி அஸ்விதா காற்றடைத்த பெரிய ராட்சச பலூன் உள்ளே இரண்டு நிமிடம் மற்றும் 11 வினாடிகள் டாக்டர் அப்துல் கலாம் சிலை முன்பு வளையம் சுற்றி சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றோர் இருவரும் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலூரில் அண்ணன், தங்கை ஜிம்னாஸ்டிக்கில் உலக சாதனை!

சிறுவர், சிறுமியர் தாயார் உற்சாகப்படுத்தியது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஜான் லாரன்ஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கோவை எம்ஜிஆர் சந்தையை சூழ்ந்த மழை நீர்! - அவதியடைந்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details