தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 13, 2019, 2:53 PM IST

Updated : Nov 13, 2019, 5:29 PM IST

ETV Bharat / state

ஆபத்தைத் தாங்கி நிற்கும் பாலம்: அலுவலர்கள் அலட்சியம்!

நாகை: அலுவலர்களின் அலட்சியத்தால் தடுப்புச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ள பாலத்தை சீர் செய்யுமாறு கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆபத்தைத் தாங்கி நிற்கும் பாலம்: அதிகாரிகள் அலட்சியம்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவில் அருகேயுள்ளது கீழையூர். இங்கே, தரங்கம்பாடி தாலுகாவையும் சீர்காழி தாலுகாவையும் இணைக்கும் வகையில் அய்யாவையனாறு ஆற்றின் குறுக்கே 1972ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.

சீர்காழி தாலுகாவிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் கீழையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். இந்தப் பாலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயிலாடுதுறையிலிருந்து கீழையூர் மார்க்கத்தில் அரசுப் பேருந்தும் இயக்கப்பட்டுவருகிறது.

"பாலத்தின் இருபக்கமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பி பெயர்ந்து விழுந்ததால், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே பாலத்தைக் கடந்துவருகிறோம்" என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

ஆபத்தைத் தாங்கி நிற்கும் கீழையூர் பாலம்

அய்யாவையனாறு பாலத்தைக் கடக்க பேருந்துகளும் பள்ளி வாகனங்களும் ஆமைபோல் மெதுவாக ஊர்ந்து செல்லும் அவலநிலையே உள்ளது. பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு வேலி அமைக்க அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டால், பாலம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்கிறார்கள்.

இதையும் படிங்க...ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை நீடிப்பு

Last Updated : Nov 13, 2019, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details